கல்கி 2ம் பாகத்தில் தீபிகா படுகோன் திடீர் நீக்கம்
ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பான் இந்தியா படம், ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இப்படம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
கல்கியை சுமக்கும் சுமதி என்ற கர்ப்பிணி பெண்ணாக தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில், தற்போது 2ம் பாகத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘தீபிகா படுகோன் ‘கல்கி 2898 ஏடி’ 2ம் பாகத்தில் நடிக்க மாட்டார். அதிக கவனத்துடன் பரிசீலனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நீண்ட காலம் பயணித்து இருந்தபோதிலும், மீண்டும் ஒரு அணியாக எங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.