தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

‘சூப்பர் ஹீரோ’ கேரக்டரில் கல்யாணி

  துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் 7வது படம், ‘லோகா சேப்டர் 1: சந்திரா’. வரும் ஓணம் பண்டிகைக்கு திரைக்கு வரும் இப்படம், இந்திய திரையுலகில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோவாக அதிரடி கேரக்டரில்...

 

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் தயாரிக்கும் 7வது படம், ‘லோகா சேப்டர் 1: சந்திரா’. வரும் ஓணம் பண்டிகைக்கு திரைக்கு வரும் இப்படம், இந்திய திரையுலகில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். டொமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடித்துள்ளனர். சூப்பர் ஹீரோவாக அதிரடி கேரக்டரில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

மலையாள படவுலகம் இதுவரை பார்க்காத உலகத்தை காட்சிப்படுத்தி இருக்கும் இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாக்கப்படும் ‘லோகா சேப்டர் 1: சந்திரா’ படம், சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைத்துள்ளார். சாந்தி பாலசந்திரன் கூடுதல் திரைக்கதை எழுத, யானிக் பென் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார்.