மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ல் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’. இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்தார். மற்றும் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு இப்படம் கடந்த ஜூன் 23ம்...
இந்நிலையில் கவுதம் வாசுதேவ் மேனன் அளித்துள்ள பேட்டியில், ‘எனது இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்திருந்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2ம் பாகத்தின் கதையை கமல்ஹாசனிடம் சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீசுக்குப் பிறகு ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் 2வது பாகத்துக்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.