தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கம்பி கட்ன கதை: திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவான ‘கம்பி கட்ன கதை’ திரைப்படத்தில் நட்டி (நட்ராஜ்), முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மோசடி செய்து வாழும் நட்டி, கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார். ஆனால் அந்த வைரம் பதுக்கி வைத்திருந்த இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட்டிருப்பதால், சாமியார் வேடமிட்டு கோவிலுக்குள் நுழைந்து அதை மீட்டெடுக்க முயலும் நட்டி சந்திக்கும் சம்பவங்களே கதை.

நட்டி நட்ராஜ் இப்படத்தில் பேசும் வாய்ப்பு நிறைய இருந்ததால் கதை முழுவதும் உரையாடல்களால் நிரம்பியுள்ளது. முகேஷ் ரவி ஒரு பாடல் மற்றும் சண்டைக் காட்சியில் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ஸ்ரீரஞ்சினி, ஷாலினி ஆகியோர் பாடல் காட்சிகளுக்காக மட்டுமே வந்துள்ளனர். சிங்கம்புலி மற்றும் மற்ற நகைச்சுவை நடிகர்களின் காட்சிகள் எதிர்பார்த்த சிரிப்பை ஏற்படுத்தவில்லை.

இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் சராசரியாகவே உள்ளன. இயக்குநர் போலி சாமியாரின் கதையை நகைச்சுவையாக சொல்ல முயன்றாலும், திரைக்கதையின் பலவீனம் காரணமாக படம் நகர மறுக்கிறது.

மொத்தத்தில், ‘கம்பி கட்ன கதை’ இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் ‘‘ சதுரங்க வேட்டை‘‘ படத்தை நெருங்கியிருக்கலாம்.