தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆங்கிலத்தில் வெளியாகும் ‘காந்தாரா: சாப்டர் 1’

ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கி நடித்து ஹிட்டான பான் இந்தியா படம், ‘காந்தாரா: சாப்டர் 1’. இதில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்திருந்தார். 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், இதுவரை உலக அளவில் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் உலகளாவிய ஆங்கில வெளியீட்டை படக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 31ம் தேதி இதன் ஆங்கில பதிப்பு வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அசல் பதிப்பில் இருந்து அரை மணி நேர காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, திரையில் ஆங்கில பதிப்பு ஓடும் நேரம் 2 மணி, 14 நிமிடங்கள், 45 விநாடிகள் என்று கூறப்பட்டுள்ளது.