கந்துவட்டி கொடுமையை சொல்லும் காமெடி படம்
சென்னை: லோகேஷ் குமார் இயக்கத்தில், முனீஷ்காந்த் நாயகனாக நடிக்கும் கிராமத்து டார்க் காமெடி திரைப்படம் உருவாகிறது. மை சன் இஸ் கே, என்4 போன்ற விருதுகள் பெற்ற சுயாதீன படங்கள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் லோகேஷ் குமார், தற்போது மதுரையின் வாடிப்பட்டியை மையமாகக் கொண்டு, நடிகர் முனீஷ்காந்த் நாயகனாக நடிக்க, கிராமத்து பின்னணியில் ஒரு முழுமையான டார்க் காமெடி படத்தை இயக்கி வருகிறார். எளியவர்களுக்கு எளிதாக கிடைக்கும் கந்து வட்டி எப்படி அவர்களின் கழுத்தை நெருக்குகிறது என்பதை டார்க் காமெடி ஜானரில் இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் குமார். ருத்ரன் பிரவீன், ஷாதிகா, மௌரிஷ் தாஸ், அஷ்வின், நாகராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மதுரையை அடுத்த வாடிபட்டியில் துவங்கி ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.