கன்னட சினிமாவில் ராஷ்மிகாவுக்கு தடை
சென்னை: கன்னட சினிமாவிலிருந்து வந்தவர் ராஷ்மிகா. ஆனால் என்னை உருவாக்கியது தெலுங்கு திரையுலகம்தான் என பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கன்னட படங்களில் அவரை நடிக்க வைக்கக் கூடாது என கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து அவரை கன்னட படங்களுக்கு யாரும் அழைப்பதில்லை. இது பற்றி ராஷ்மிகா கூறியது: கன்னடத் திரைத்துறையிலிருந்து என்னை விலக்கிவிட்டதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
பொதுக் கருத்துக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் இருக்கும் எல்லாவற்றையும் ஆன்லைனில் பகிர முடியாது, பகிரவும் கூடாது. உள்ளுக்குள் என்ன நடக்குதுன்னு உலகத்துக்குத் தெரியாது. நம்மால் எப்பவும் நம்ம தனிப்பட்ட வாழ்க்கையில் கேமராவை வைக்க முடியாது. வரும் வந்ததிகளில் தெரிஞ்சதை விட நிறைய விஷயங்கள் இருக்கு. தொழில்முறை விமர்சனம் வரவேற்கத்தக்கது.
ஆனால் தனிப்பட்ட அனுமானங்கள் தவறு. ஒருத்தர் வாழ்க்கை பத்தி மக்கள் என்ன சொல்றாங்கன்றது முக்கியமில்ல. அதே நேரம் தொழில்முறை வாழ்க்கையில் நாம மாத்திக்க வேண்டியதை சொன்னா அதைக் கருத்தில் கொண்டு வேலை செய்வோம். யார் எனக்கு தடை விதிக்கிறார்களோ அவர்களிடம் சென்று கேளுங்கள். இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.