தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கன்னடத்தில் ஹிட்டான சு ஃபிரம் சோ இந்தியில் ரீமேக் செய்யும் அஜய் தேவ்கன்

மும்பை: கன்னடத்தில் ஜே.பி.துமினாட் எழுதி இயக்கி நடித்து, கடந்த ஜூலை 25ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘சு ஃபிரம் சோ’ (சுலோசனா ஃபிரம் சோமேஷ்வரா). திகிலுடன் கூடிய காமெடி படமான இது, சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை...

மும்பை: கன்னடத்தில் ஜே.பி.துமினாட் எழுதி இயக்கி நடித்து, கடந்த ஜூலை 25ம் தேதி திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘சு ஃபிரம் சோ’ (சுலோசனா ஃபிரம் சோமேஷ்வரா). திகிலுடன் கூடிய காமெடி படமான இது, சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இதுவரை 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

ராஜ் பி.ஷெட்டியின் லைட்டர் புத்தா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கேரள உரிமையை துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் வாங்கியுள்ளது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டது. ராஜ் பி.ஷெட்டி முக்கிய கேரக்டரில் நடித்த ‘சு ஃபிரம் சோ’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்கப்பட்டு விட்டது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் கேட்டுள்ளார். இதுகுறித்து ஜே.பி.துமினாட்டிடம் பேசிய அவர், இப்படத்தை இந்தியில் உருவாக்க முழுமையான ஸ்கிரிப்ட்டுடன் வந்து தன்னை சந்திக்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.