தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, புதிய வெப் சீரிஸ் !

“வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் zee5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், மண் சார்ந்த பாரம்பரியக் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், அதிரடி ஆக்சன் கதைக்களம் ஆகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

“வேடுவன்” சீரிஸ் பற்றி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட கண்ணா ரவி கூறுகையில்; “வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி-தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸ் மட்டும் அல்ல, நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்.” “வேடுவன்” சீரிஸை வரும் அக்டோபர் 10 முதல், உங்கள் ZEE5 இல் காணலாம் .