தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காந்தா விமர்சனம்...

இயக்குனர் சமுத்திரக்கனியின் கனவுப்படமான ‘சாந்தா’வில் இருந்து வெளியேறிய டி.கே.மகாதேவன் என்கிற துல்கர் சல்மான், மீண்டும் அப்படத்தை ‘காந்தா’ என்ற பெயரில், தன் விருப்பப்படி தொடங்கி நடிக்கிறார். ஹீரோயின் குமாரியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார். துல்கர் சல்மான் செய்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமுத்திரக்கனி, தான் எழுதிய கிளைமாக்ஸுடன் படம் முடிய வேண்டும் என்பதில் உடும்புப்பிடியாக இருக்கிறார். அதற்காக, தான் அறிமுகம் செய்த பாக்யஸ்ரீ போர்ஸை வைத்து சில சூழ்ச்சிகளை செய்கிறார். இதன் விளைகள் மீதி கதை.

திருச்செங்கோடு காளிதாஸ் மகாதேவன் (டிகேஎம்) என்ற கேரக்டரில், 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ள துல்கர் சல்மானுக்கு தேசிய விருது நிச்சயம். ெகட்டப், ேஹர் ஸ்டைல், வசீகர முகம், ஈகோ மோதல், காதல் உணர்வு, மனைவியிடம் பயம் என்று, நவரச நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து ஹீரோயினாகவும், காதலியாகவும் பாக்யஸ்ரீ போர்ஸ் பிரமாதமாக நடித்துள்ளார்.

சீனியர் இயக்குனர் அய்யா கேரக்டரில் சமுத்திரக்கனி அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். ராணா டகுபதியின் வித்தியாசமான விசாரணை பரபரப்பை ஏற்படுத்துகிறது. அவரது மேனரிசங்கள் வியக்க வைக்கிறது. உதவி இயக்குனர் பிஜேஷ் நாகேஷ், துல்கர் சல்மான் மனைவி காயத்ரி சங்கர், உதவியாளர் வையாபுரி மற்றும் ‘நிழல்கள்’ ரவி, ரவீந்திர விஜய், ஜாவா சுந்தரேசன், ‘ஆடுகளம்’ நரேன், பக்ஸ், பாக்யஸ்ரீ போர்ஸின் தோழி ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கதைக்கேற்ற பாடல்களை ஜானு சந்தர் வழங்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் டானி சான்செஸ் லோபஸ், எடிட்டர் லெவெல்லின் அந்தோணி கோன்சால்வெஸ், ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் மூவரும் 3 தூண்கள். முழுநீள சஸ்பென்ஸ் இயக்குனர் செல்வமணி செல்வராஜுக்கு பாராட்டு. படத்தின் நீளம் சோர்வை ஏற்படுத்துகிறது.