கார்த்தியின் ‘‘ வா வாத்தியார்’’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கார்த்தி நடிப்பில் ‘‘ மெய்யழகன்’’ திரைப்படம் இப்போது வரை பேசு பொருளாக பலரிடமும் பாராட்டுகளை அள்ளி வருகிறது. ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் கார்த்தி நடித்து முடித்தார்.
இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் “வா வாத்தியார்” திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 5ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.