தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கார்த்திக் உடல் நிலை பாதிப்பா? கவுதம் கார்த்திக் விளக்கம்

சென்னை: நடிகர் கார்த்திக் வீல் சேரில் அமர்ந்து செல்வது போன்ற புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இது மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். கார்த்திக் உடல் நிலை பாதிப்பா என ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள். இது பற்றி பேசிய அவரது மகனும் நடிகருமான கெளதம் கார்த்திக், ‘‘அப்பா இப்போது சினிமாவில் நடிக்காததால் அவருக்கு அந்த பிரச்னை இருக்கிறது, இந்த பிரச்னை இருக்கிறது என்று சிலர் பேசி வருகிறார்கள். அப்பாவுக்கு இப்போது வயதாகிறது. அதனால் ஒவ்வொரு வருடமும் மெடிக்கல் செக் அப் செல்வது வழக்கம் தான். அப்படி செல்லும்போது அவரால் படிக்கட்டு ஏறமுடியவில்லை என்பதால் வீல்சேரில் அழைத்துச் சென்றோம். அதனை போட்டோ எடுத்து அவருக்கு வேறு பிரச்னைகள் இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள். அப்பா நன்றாக இருக்கிறார். இப்போதும் ரசிகர்களை அவ்வளவு நேசிக்கிறார்’’ என்று உருக்கமாக விளக்கமளித்துள்ளார்.