கட்டா குஸ்தி 2வில் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி
சென்னை: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம் கட்டா குஸ்தி. தற்போது 3 ஆண்டுகளுக்குப் பின் இதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேசன் ஆகியோர் தோன்றி படத்தைப் பற்றி பேசியுள்ளனர்.
புரோமோவில் பேசும் இயக்குனர் செல்லா அய்யாவு படத்தின் கதைக்கான கான்செப்டை சூசகமாக கூறினார். அதில் ”பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா ஒரு நாள் தான் கஷ்டம். சேர்ந்திருந்தால் ஒவ்வொரு நாளும் கஷ்டம் தான்” என்று கூறியிருக்கிறார். கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தின் கதைகளம் இதனை மையப்படுத்தியே இருக்கும் என்று தெரிகிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் கூட்டாக தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கவிருக்கிறார்.