சிம்பு,தனுஷ் படங்களில் கயாடு லோஹர் நீக்கமா?
சென்னை: கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள கயாடு லோஹர், தமிழில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்த ‘டிராகன்’ என்ற படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறி, தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். தவிர, ரசிகர்களின் ‘கிரஷ்’ ஆக மாறியுள்ள அவர், சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.
அவர் பதிவிடும் போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. அதர்வா ஜோடியாக ‘இதயம் முரளி’, ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக ‘இம்மார்ட்டல்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள கயாடு லோஹர், சிம்புவின் 49வது படத்தில் நடிப்பதாகவும், தனுஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியானது. சிம்பு பட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஷூட்டிங் தொடங்கும் போது, கயாடு லோஹரின் கால்ஷீட் கிடைக்குமா என்று தெரியவில்லை. தனுஷ் நடிக்கும் புதுப்படத்தில் மமிதா பைஜுவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவ்விரு படங்களும் கைவிட்டு சென்றதால் டென்ஷனான கயாடு லோஹர், மலையாளத்தில் டொவினோ தாமஸ் ஜோடியாக ‘பள்ளிச்சட்டம்பி’, தெலுங்கில் நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘தி பாரடைஸ்’ என்ற படத்தில் அவர் பாலியல் தொழிலாளி வேடம் ஏற்றுள்ளார்.