காயல் விமர்சனம்...
வெவ்வேறு சாதியை சேர்ந்த ‘கபாலி’ லிங்கேஷ், காயத்ரி சங்கர் ஜோடி, ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கின்றனர். தாய் அனுமோல் காயத்ரி சங்கரை வேறொருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார். காயத்ரி தற்கொலை செய்துகொள்கிறார். இந்நிலையில் அனுமோலும் அவரது கணவர் ஐசக் வர்கீசும் லிங்கேஷை சந்திக்கும்போது, எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன என்பது மீதி கதை.
லிங்கேஷ் இயல்பாக நடித்துள்ளார். காதலி காயத்ரி சங்கர், அழுத்தமாக நடித்து கவனத்தை ஈரக்கிறார். இன்னொரு காதலி ஸ்வாகதா கிருஷ்ணன், மனநிலை பாதித்த அனுமோல், பாசத்தில் தவிக்கும் ஐசக் வர்கீஸ், மனநல மருத்துவர் ரமேஷ் திலக் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர். கடல் சார்ந்த பகுதிகளை கார்த்திக் சுப்பிரமணியன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன. சாதியை காரணம் காட்டி காதலை எதிர்ப்பவர்களை சிந்திக்க வைக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ள எழுத்தாளர் தமயந்தி, காதல் உணர்வுகள் மற்றும் சாதிவெறியால் இளம் ஜோடியின் காதல் பலியாகும் வலியை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் அழுத்தம் இருந்திருக்க வேண்டும்.