தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் கீர்த்தி

முதல்முறையாக கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் இணைந்து நடிக்கும் மலையாள படம், ‘தோட்டம் - தி டிமேன் ரிவீல்ட்’. ரிஷி சிவகுமார் எழுதி இயக்கும் இப்படத்தின் மூலமாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு கீர்த்தி சுரேஷ் மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார். அவரது தோற்றமும், கேரக்டரும் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. முகமது இர்ஃபான் தலைமையிலான வி ஆக்‌ஷன் டிசைன் குழு சண்டைப்பயிற்சி அளிக்கிறது. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைக்கிறார். சாமன் சாக்கோ எடிட்டிங் செய்ய, மோகன்தாஸ் அரங்கம் அமைக்கிறார்.

ஃபர்ஸ்ட் பேஜ் எண்டர்டெயின்மெண்ட், ஏவிஏ புரொடக்‌ஷன்ஸ், மார்கா எண்டர்டெயினர்ஸ் சார்பில் மோனு பழேதத், ஏ.விஅனூப், நாவல் விந்தியன், சிம்மி ராஜீவன் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘கண்ணிவெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாகவும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.