தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கென் கருணாஸ் படத்தில் 3 ஹீரோயின்

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. தொடர்ந்து ‘விடுதலை 2’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். தற்போது கென் கருணாஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் என்ற தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு...

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. தொடர்ந்து ‘விடுதலை 2’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். தற்போது கென் கருணாஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் என்ற தகவல் வெளியானது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சியை எளிமையான முறையில் நடத்தியுள்ளனர். பள்ளி பருவத்தை மட்டும் மையப்படுத்தி உருவாகவுள்ள இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி, நடிக்கவுள்ளார். இந்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘கோர்ட் vs ஸ்டேட் நோபடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான  தேவி, மலையாள நடிகை அனிஸ்மா மற்றும் இந்தி சீரியல் நடிகை பிரியன்ஷி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும், இப்படத்தில் கென் கருணாஸின் அப்பா கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் சூரஜ் வென்ஜரமூடு, மற்றும் அம்மா வேடத்தில் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.