கிடா பந்தயம் பின்னணியில் ஜாக்கி
சென்னை: பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ‘ஜாக்கி’ படத்தை டாக்டர் பிரகபல், ‘மட்டி’ படத்துக்கு பிறகு இயக்குகிறார். அவர் கூறியது: மதுரையில் நான் கிடா சண்டை பந்தையத்தை நேரில் பார்த்தேன். அந்த பந்தையத்தை பார்க்கும் போதே, அது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த கிடா சண்டைக்குள் ஒரு வாழ்வியலும், அது மட்டுமின்றி உணர்வு நிலையில் கிடாவிற்கும் அதன் கட்டாரிக்கும் ஒரு பிணைப்பு இருப்பதை கவனித்தேன். இந்த மாதிரி சண்டை கிடாக்களை வளர்ப்பதற்காக அவர்களுடைய ஐ.டி. வேலைகளை கூட விட்டுவிட்டு, சொந்த ஊர்களுக்கு திரும்பிய நிறைய இளைஞர்கள் சந்தித்தது எனக்குள் பெரிய ஆச்சர்யத்தை உண்டாக்கியது.
இது மட்டுமின்றி இன்னொரு காரணம், இந்த சண்டை கிடாக்கள் எல்லோருடைய குடும்பத்திலும் ஒரு நபராக மாறியிருந்ததை கண்டேன். மனிதர்களை போல, அந்த கிடா இறந்தால் கூட கடவுளாக வழிபடப்படும் வழக்கத்தையும் கண்டேன். இரண்டரை வருடத்திற்கு மேலான அனுபத்துடன் தான் நான் படப்பிடிப்பிற்கு சென்றேன். நாயகனாக யுவன் கிருஷ்ணா நடிக்கிறார். கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்திருக்கிறார், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மது சூதன் ராவ் நடித்துள்ளார். மற்றும் சில தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தொகுப்பு - ஶ்ரீகாந்த். ஒளிப்பதிவு - உதயகுமார். இசை - சக்தி பாலாஜி. இவ்வாறு அவர் கூறினார்.