கிஷோர் நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்
சென்னை: ‘காளிதாஸ்’ (2019) திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்கிரடிபிள் புரொடக்ஷன்ஸ் தனது அடுத்த தயாரிப்பை அறிவித்துள்ளது. இது எதிர்பாராத திருப்பங்களை திரைக்கதையாய் கொண்ட சஸ்பென்ஸ் திரில்லர் படம். இப்படத்தை தயாரிக்கும் சிவநேசன் எஸ். இதில் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இயக்குநர் கூறுகையில், “இந்த படத்தில் திரைக்கதையே ஹீரோ. ரசிகர்களை கடைசி வரை சஸ்பென்ஸில் வைத்திருக்கும் கதை இது” என தெரிவித்தார். இப்படத்தில் கிஷோர், சார்லி, சாருகேஷ், வினோத் கிஷன், மற்றும் ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்கள். இசை: விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா. படத்தொகுப்பு: புவன் சீனிவாசன்.
