தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

முத்தக்காட்சியில் நடிக்க மெஹ்ரின் மறுப்பா? வசந்த் ரவி விளக்கம்

சென்னை: தமிழில் வெளியான ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’, ‘ஜெயிலர்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘வெப்பன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வசந்த் ரவி நடித்துள்ள 7வது படம், ‘இந்திரா’. வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் உதவியாளர் சபரிஷ் நந்தா எழுதி இயக்கியுள்ளார். ஜேஎஸ்எம் புரொடக்‌ஷன்ஸ், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாபர்...

சென்னை: தமிழில் வெளியான ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’, ‘ஜெயிலர்’, ‘பொன் ஒன்று கண்டேன்’, ‘வெப்பன்’ ஆகிய படங்களை தொடர்ந்து வசந்த் ரவி நடித்துள்ள 7வது படம், ‘இந்திரா’. வரும் 22ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் உதவியாளர் சபரிஷ் நந்தா எழுதி இயக்கியுள்ளார். ஜேஎஸ்எம் புரொடக்‌ஷன்ஸ், எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாபர் சாதிக், இர்பான் மாலிக் இணைந்து தயாரிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் வெளியிடுகிறார். சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் சுனில், கல்யாண் மாஸ்டர், அனிகா சுரேந்திரன் நடித்துள்ளனர். வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். அஜ்மல் தஹ்சீன் இசை அமைத்துள்ளார். பிரபாகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  படம் குறித்து வசந்த் ரவி கூறுகையில், ‘போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளேன்.

எனக்கும், வில்லன் சுனிலுக்குமான ஈகோ ேமாதல்தான் கதை. ஒருகட்டத்தில் எனக்கு பார்வை பறிபோகிறது. அப்போது சுனில் விடும் சவாலை நான் ஏற்றுக்கொண்டு, குற்றத்தை எப்படி கண்டுபிடிக்கிறேன் என்பது கதை. எனது ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடித்துள்ளார். தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’, ‘நோட்டா’, ‘பட்டாஸ்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர், என்னுடன் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளார். அந்த போட்டோ வைரலாகி இருந்தது.

முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னபோது, அதன் தேவையை புரிந்துகொண்டு மெஹ்ரின் பிர்சாடா ஆர்வத்துடன் நடித்தார். ‘வல்லவன்’ படத்தின் போது சிம்பு, நயன்தாரா போஸ்டர் ஏற்படுத்தியிருந்த பரபரப்பு போல் எங்களின் முத்தக்காட்சி போஸ்டர் ஏற்படுத்தியது. அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறேன். இவ்விரு படங்களும் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகின்றன’ என்றார்.