தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கேஜேஆர் நடிக்கும் புதிய படம் தொடங்கியது

சென்னை: ‘அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான கே ஜே ஆர்- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், தெலுங்கு...

சென்னை: ‘அங்கீகாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமான கே ஜே ஆர்- கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பூஜையுடன் படபிடிப்பு தொடங்கியது. ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் கோ- டைரக்டராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் கே ஜே ஆர், அர்ஜுன் அசோகன், தெலுங்கு ‘கோர்ட்’ பட ஹீரோயின் ஸ்ரீ தேவி, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி, அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ், அஜூ வர்கீஸ், காந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் பி. வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை ‘மார்க் ஆண்டனி’ படத்தை தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை.