கொடவா சமூகம் பற்றி பேச்சு ராஷ்மிகா மீது பிரபல நடிகை தாக்கு
பெங்களூரு: கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்த முதல் நபர் தான் என கூறி நடிகை ராஷ்மிகா மந்தனா சர்ச்சையில் சிக்கி உள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவில் பிறந்த ராஷ்மிகா மந்தனா, அண்மையில் அளித்த பேட்டியில் தனது சினிமா...
ராஷ்மிகாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கொடுவா என அழைக்கப்படும் கூர்க் சமூகத்தில் இருந்து இதற்கு முன்பு பல நடிகைகள் திரைத்துறைக்கு வந்துள்ளனர். குறிப்பாக 90களின் இறுதியில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை பிரேமா அந்த சமூகத்தை சேர்ந்தவர் தான் என்பதை குறிப்பிட்டு ராஷ்மிகாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேட்டியளித்த நடிகை பிரேமா, ‘கூர்க் மக்களுக்கே உண்மை என்ன என்பது தெரியும்’ என்றும், ‘தாம் நடிக்க வருவதற்கு முன்பே இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சினிமாவில் இருந்ததாகவும் தற்போதும் இருக்கிறார்கள்’ என்றும் தெரிவித்துள்ளார்.