தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

3 காலகட்ட கதை பரிவர்த்தனை

சென்னை: எம்.எஸ்.வி புரொடக்‌ஷன்ஸ் பொறி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கும் படம், ‘பரிவர்த்தனை’. வரும் செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தை ‘வெத்துவேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘மனித வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது காதலிக்கும்...

சென்னை: எம்.எஸ்.வி புரொடக்‌ஷன்ஸ் பொறி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்திருக்கும் படம், ‘பரிவர்த்தனை’. வரும் செப்டம்பர் 8ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தை ‘வெத்துவேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘மனித வாழ்க்கையின் சிறந்த தருணம் என்பது காதலிக்கும் காலம்தான். அதை மிக இயல்பாகப் படமாக்கி இருக்கிறோம். சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, தேவிப்பிரியா, பாரதிமோகன், திவ்யா ஸ்ரீதர் நடித்துள்ளனர். மூன்று காலகட்டங்களில் நடந்து முடியும் கதை கொண்ட இதில், பருவ வயதினராக மோகித், ஸ்மேகா மற்றும் சிறு வயதினராக விதுன், ஹாசினி நடித்துள்ளனர். கொல்லிமலை பகுதியின் தென்பகுதியில் இருக்கும் புளியஞ்சோலையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. கோகுல் ஒளிப்பதிவு செய்ய, ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். விஜேபி.ரகுபதி பாடல்கள் எழுதியுள்ளார்’ என்றார்.