22 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா
மலையாள நடிகை நயன்தாரா, ஹரி இயக்கிய ‘ஐயா’ என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், ரவி மோகன், ஆர்யா, ஜெய் உள்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய...
கிரித்தி ஷெட்டிக்கு மவுசு கூடுமா?
தெலுங்கு மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் கிரித்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் வெற்றிப் படம் அமையவில்லை. இதனால் அவரது திரையுலக மார்க்கெட் நிலவரம் ஊசலாடி வரும் நிலையில், தமிழில் ‘வா வாத்தியார்’, ‘எல்ஐகே’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘ஜீனி’ தவிர்த்து மற்ற இரு படங்கள் திரைக்கு வர...
சார்மி படத்தில் இணைந்த ஹர்ஷவர்தன்
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன், தபு, விஜயகுமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் நடிக்கும் படத்தை புரி கனெக்ட்ஸ், ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், ஜே.பி.நாராயண ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், தேசிய விருது பெற்ற இசை இமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்....
நீதிபதி வேடத்தில் சோனியா அகர்வால்
புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன், கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் இணைந்து வழங்க, எஸ்.சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த், புதுமுகம் அலீகியா நடிப்பில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள படம், ‘வில்’ (உயில்). டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சோனியா அகர்வால் சகோதரர் சவுரவ் அகர்வால் இசை அமைத்துள்ளார். ஜி.தினேஷ் எடிட்டிங் செய்ய, மணி அரங்கம் அமைத்துள்ளார்....
கிரித்தியுடன் இணைந்த யாமி கவுதம்
பாலிவுட் டைரக்டர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள முழுநீள காதல் கதை கொண்ட படம், ‘தேரே இஷ்க் மெய்ன்’. இதில் தனுஷ் ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், புதுப்படத்தில் பணியாற்றுவது குறித்து ஆனந்த் எல்.ராய் தீவிர ஆலோசனை...
ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு: சோஷியல் மீடியாவில் சலசலப்பு
மும்பை: ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அபுதாபியில் ஷேக் ஜாயித் கிராண்ட் மசூதி உள்ளது. மிக பிரமாண்டமான இந்த மசூதியை பார்க்க உலகமெங்கிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த மசூதிக்குள் வரும்போது யாரும் ஷாட்ஸ் அணிந்து வரக்கூடாது. தலை முகம்...
ஹுமாவின் இந்த டிஷர்ட் ரூ.65000
மும்பை: ரஜினியுடன் காலா, அஜித்துடன் வலிமை படங்களில் நடித்தவர் ஹுமா குரேஷி. சமீபத்தில் இவர் விமான நிலையத்திற்கு வித்தியாசமான ஆடையணிந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. டிஷர்ட் அணிந்து சென்ற ஹூமாவின் அந்த ஆடையின் முன்பக்கம் சரியாக காணப்பட்டும் பின்பக்கம் தாறுமாறாக கிழிந்தும் காணப்பட்டுள்ளது. Cotton Balenciaga பிராண்ட்டை சேர்ந்த இந்த டிஷர்ட்டின்...
ஈகை படத்தில் 25 புதுமுகங்கள்
சென்னை: ஒரு சட்ட கல்லூரி மாணவியின் சமூகதீர்க்கான போராட்டம் தான் ‘ஈகை’ என்கிறார் இப்படத்தின் இயக்குனர் அசோக் வேலாயுதம். அவர் மேலும் கூறும்போது, ‘‘இப்படத்தில் மார்க் எனும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரோஷன் கனகராஜ் என்பவரை அறிமுகம் செய்கிறேன். இவரும் புஷ்பா பட வில்லன் சுனிலும் முக்கிய கதாபாத்திரங்களாக இருக்கும். இத்துடன் சேர்ந்து அருவி பாலா,...
எஸ்கே 24: ராஷ்மிகா இடத்தை பிடித்தார் ஸ்ரீலீலா
சென்னை: ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் தற்போது அதிரடியான மாற்றம் ஒன்று நிகழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த எஸ்கே 24 படத்தில் ரஷ்மிகா தான் நாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ரஷ்மிகா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக ஒரு...