காதல் தோல்வி குறித்து ராஷ்மிகா
வரும் நவம்பர் 14ம் தேதி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘தி கேர்ள் பிரண்ட்’ என்ற படம் திரைக்கு வருகிறது. இதை நடிகர் ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இவர், பாடகி சின்மயியின் கணவர். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், ‘காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால், ஆண்களை விட...
திரிப்தி டிம்ரி படப்பிடிப்பு ஒத்திவைப்பு
கடும் சர்ச்சைக்குள்ளாகி ஹிட்டாகி வசூலை குவித்த ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ போன்ற படங்களை இயக்கியவர், சந்தீப் ரெட்டி வங்கா. அவரது இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற இந்தி படத்தில் நடிக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பிரபாஸ் ஒப்பந்தமாகி, பல கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு 2025ல் தொடங்கும் என்று அப்போது அறிவித்திருந்தனர்....
சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா மோகன் பட இயக்குனர்
இன்று நெட்பிளிக்சில் வெளியாகும் படம், ‘ஓஜி’. தியேட்டரில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் தனய்யா, இயக்குனர் சுஜித் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை தனது சொந்த பணத்திலேயே இயக்குனர் முடித்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த முரண்பாடால் நானி...
இயக்குனராக அறிமுகமாகும் எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்
கடந்த 1990களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ‘தடை அதை உடை’. காந்திமதி பிக்சர்ஸ் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ளார். ‘அங்காடித்தெரு’ மகேஷ், ‘திருக்குறள்’ குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை,...
‘பகல் கனவு’ படத்தில் பேய் வேட்டை
‘பகல் கனவு’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ள பைசல் ராவ், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் கூல் சுரேஷ், ஷகீலா, கராத்தே ராஜா நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியிடப்பட்டது. பேய் வேட்டையை மையமாக வைத்து திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாக்கியுள்ளது....
50 வயதாகியும் சித்தாரா திருமணம் செய்யாதது ஏன்..? வைரலாகும் புது தகவல்
சென்னை: மலையாளத்தில் 1986ம் ஆண்டு வெளியான காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிக்க தொடங்கியவர் நடிகை சித்தாரா. மம்முட்டி-மோகன்லால் நடித்த அப்படம் சித்தாராவிற்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. முதல் படமே வெற்றி பெற்றதால் மலையாளத்தில் அடுத்தடுத்து படங்கள் நடித்தார். தமிழில் இயக்குனர் கே.பாலசந்தரின் புதுப்புது அர்த்தங்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் புது வசந்தம், உன்னைச்...
கின்னஸ் சாதனை படைத்த டான்சர்
சென்னை: கின்னஸ் சாதனை படைத்த டான்சருக்கு கலா மாஸ்டர் பட்டம் வழங்கினார். சென்னையை அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டப் படிப்பை படித்து வரும் சக்தி பூரணி இரண்டு கின்னஸ் சாதனைகளை படைத்து நடன உலகில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர். இவர் கின்னஸ் சாதனை படைத்ததுடன் மட்டும் இல்லாமல் வில்வித்தை, கிராமிய நடனங்கள்,...
ஓராண்டுக்கு பிறகு மகள் துவாவை அறிமுகப்படுத்திய தீபிகா
மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்த இந்தியாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோன், இதுவரை தனது மகள் துவாவின் முகத்தை வெளியிடாமல் வைத்திருந்தார். இப்போது முதல்முறையாக தீபாவளியின்போது மகளின் முகத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. பாலிவுட் நட்சத்திர தம்பதி தீபிகா படுகோன், ரன்வீர் சிங் தங்கள் மகள் துவாவுடன்...
வெற்றிமாறன் பாராட்டிய மெல்லிசை
சென்னை: ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான ‘மெல்லிசை’ திரைப்படத்தின் முதல் பார்வையை பார்த்த வெற்றிமாறன் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அப்பா- மகள் இடையேயான அழகான உறவை திரையில் பிரதிபலிக்கும் இந்தக் கதையில் கிஷோர் குமார் மற்றும் புதுவரவு தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா...
