கமல்ஹாசனுக்கு அமிதாப் பாராட்டு
சென்னை: நாக் அஸ்வின் இயக்கும் பான் இந்தியா படம், ‘கல்கி 2898 - ஏடி’. இதில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இது சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் விழாவில் பேசிய கமல்ஹாசன், ‘நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ்...
தொடர்ந்து கமல்ஹாசன் பேசும்போது, ‘இந்தியில் உருவான ‘ஷோலே’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். ரிலீசான அன்று அப்படத்தைப் பார்த்தேன். அன்றிரவு முழுக்க என்னால் தூங்க முடியவில்லை. அந்தளவு ஒரு டெக்னீஷியனாக அப்படத்தை வெறுத்தேன். நான் எவ்வளவு பெரிய இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன் என்று தெரிந்த பிறகும் கூட, அப்போது எனது ரியாக்ஷன் அதுவாக மட்டும்தான் இருந்தது. ஆனால், அமிதாப் ஜி என்னுடைய பல படங்களைப் பற்றி நல்ல விஷயங்களைப் பேசியுள்ளார். அவருக்கு என் நன்றி’ என்றார்.