முன்னணி ஹீரோக்களை விளாசும் தீபிகா படுகோன்; அவங்களுக்கு மட்டும் 8 மணி நேர வேலையா?
மும்பை: ‘சினிமா படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணியாற்ற முடியும்’ என்று சொன்னது பலத்த சர்ச்சையானதை தொடர்ந்து, தீபிகா படுகோன் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். ‘கல்கி 2989 ஏடி’ என்ற பான் இந்தியா படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என்று பல விஷயங்கள் சொல்லப்பட்டது....
நயன்தாரா ஜோடியானார் கவின்
சென்னை: இசட் ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ‘ஹாய்’ என்ற படத்தை விஷ்ணு எடவன் இயக்குகிறார். இவர் லோகேஷ் கனகராஜிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர். நயன்தாரா, கவின், கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி நடிக்கின்றனர். காதல் மற்றும் குடும்பக்கதை கொண்ட படமாக உருவாக்கப்படுகிறது....
கிறிஸ்துமசுக்கு வெளியாகும் சிறை
சென்னை: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார் நடித்துள்ள படம் சிறை. அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில்...
தந்தை, மகன் பாசக்கதையில் மோகன்லால்
இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படம், ‘விருஷபா’. இது வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. காதல், விதி, பழி ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஒரு தந்தை, மகன் பாசத்தை அழுத்தமாக வலியுறுத்துகிறது. மோகன்லால், சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவேதி, நயன் சரிகா நடித்துள்ளனர். ரசூல் பூக்குட்டி ஒலி...
22 ஆண்டுகளை நிறைவு செய்த நயன்தாரா
மலையாள நடிகை நயன்தாரா, ஹரி இயக்கிய ‘ஐயா’ என்ற படத்தில் சரத்குமார் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், ரவி மோகன், ஆர்யா, ஜெய் உள்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த அவர், தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய...
கிரித்தி ஷெட்டிக்கு மவுசு கூடுமா?
தெலுங்கு மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் கிரித்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் வெற்றிப் படம் அமையவில்லை. இதனால் அவரது திரையுலக மார்க்கெட் நிலவரம் ஊசலாடி வரும் நிலையில், தமிழில் ‘வா வாத்தியார்’, ‘எல்ஐகே’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘ஜீனி’ தவிர்த்து மற்ற இரு படங்கள் திரைக்கு வர...
சார்மி படத்தில் இணைந்த ஹர்ஷவர்தன்
புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா மேனன், தபு, விஜயகுமார், பிரம்மாஜி, விடிவி கணேஷ் நடிக்கும் படத்தை புரி கனெக்ட்ஸ், ஜே.பி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் புரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், ஜே.பி.நாராயண ராவ் இணைந்து தயாரிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், தேசிய விருது பெற்ற இசை இமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இணைந்துள்ளார்....
நீதிபதி வேடத்தில் சோனியா அகர்வால்
புட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன், கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் இணைந்து வழங்க, எஸ்.சிவராமன் இயக்கத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த், புதுமுகம் அலீகியா நடிப்பில் முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள படம், ‘வில்’ (உயில்). டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய, சோனியா அகர்வால் சகோதரர் சவுரவ் அகர்வால் இசை அமைத்துள்ளார். ஜி.தினேஷ் எடிட்டிங் செய்ய, மணி அரங்கம் அமைத்துள்ளார்....
கிரித்தியுடன் இணைந்த யாமி கவுதம்
பாலிவுட் டைரக்டர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள முழுநீள காதல் கதை கொண்ட படம், ‘தேரே இஷ்க் மெய்ன்’. இதில் தனுஷ் ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், புதுப்படத்தில் பணியாற்றுவது குறித்து ஆனந்த் எல்.ராய் தீவிர ஆலோசனை...