இசையமைப்பாளருடன் நடிகை ரொமான்ஸ்
‘பிலால்பூர் போலீஸ் ஸ்டேஷன்’, ‘புஷ்பக விமானம்’ போன்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சான்வி மேகனா. இதனைத் தொடர்ந்து ‘மோஸ்ட் எலிஜிபில் பேச்சிலர்’, ‘நானே சரோஜா’, ‘பிரேமா விமானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் இந்த ஆண்டு வெளியான ‘குடும்பஸ்தன்’ என்ற படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக அறிமுகமானார். படம் மிகப்பெரிய வரவேற்பை...
‘பிதாமகன்’ பாணியில் சிவகார்த்திகேயன்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மதராஸி’. முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சிக்கந்தர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்த படமாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் பின்னணி இசை மற்றும் ஸ்டன்ட் இயக்குனர் கெவின் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ‘மதராஸி’...
ரகசியமாக படம் பார்த்த அனுபமா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக ‘பைசன்’, கவுசிக் பெகல்லபதி இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமான ‘கிஷ்கிந்தாபுரி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘கிஷ்கிந்தாபுரி’ வரும் செப்டம்பர் 12ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஜோடியாக அனுபமா...
கென் கருணாஸ் படத்தில் 3 ஹீரோயின்
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகனாக நடித்திருந்தார். இப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. தொடர்ந்து ‘விடுதலை 2’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம்பிடித்தார். தற்போது கென் கருணாஸ் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார் என்ற தகவல் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு...
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ரகசிய நிச்சயதார்த்தம்
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக செய்தி பரவியது. இருவரும் இணைந்து அவுட்டிங் செல்வது, வெளிநாடுகளுக்கு டிரிப் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘‘நான் திரைத்துறையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறேன்” என விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார். ஆனால் இதுவரை தங்களது காதலை...
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி உறுதியானது
சென்னை: சிலம்பரசன் டி.ஆர் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘எஸ்டிஆர் 49’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோவை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிம்புவின் தோற்றம் மற்றும் கதைக்களம் பற்றிய எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக சிம்பு...
50வது ஆண்டை தொட்டது லஹரி மியூசிக்
சென்னை: இசை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற நிறுவனங்களான லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக், பொன் விழா ஆண்டான 50 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளன. இந்த நிகழ்வின் அங்கமாக லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடியுடன் இணைந்து,...
சரவண பவன் ராஜகோபால் ஜீவஜோதி கதையில் மோகன்லால்
சென்னை: சரவண பவன் ஓட்டல் நிறுவனர் ராஜகோபாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’, ‘ஜெய் பீம்’, ‘வேட்டையன்’ ஆகிய படங்களை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார். கடந்த 2001ம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கடத்தி கொலை செய்த வழக்கில் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம். தண்டனையை...
ஆக்ஷன் ஹீரோயினா? அப்பா பயந்தார்: கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு
சென்னை: துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘லோகா: சாப்டர் 1 - சந்திரா’. சூப்பர் ஹீரோ கான்சப்டில் உருவான இப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 10 நாட்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. சென்னையில் நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய...