முதல் படத்தின் சம்பளத்துக்கு அலையாதீர்கள்: ஆர்.கே.செல்வமணி அட்வைஸ்
சென்னை: தேவ், தேவிகா சதீஷ், படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார், பிரவீன், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா பியா, சுபா கண்ணன், கலைக்குமார் நடித்துள்ள படம், ‘யோலோ’. சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார். ராம்ஸ் முருகன் கதை எழுதியுள்ளார். முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஷ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் பாடல்கள் எழுதியுள்ளனர்.
எஸ்.சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ் திரைக்கதை எழுதியுள்ளனர். எம்.ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்க, அமீர் உதவி யாளர் எஸ்.சாம் இயக்கியுள்ளார்.
வருகிற 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ‘பெப்சி’ தலைவர் மற்றும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், ‘YOLO என்றால், You Only Live Once என்று அர்த்தம். நிஜம்தான், அனைவரும் ஒருமுறைதான் வாழ்கிறோம்.
அதை அற்புதமாக வாழ்வோம். என் முதல் படத்துக்கு 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தனர். அடுத்த படத்துக்கு ஒரு கோடி ரூபாய் தந்தனர். முதல் படத்தின் சம்பளத்துக்கு அலையாதீர்கள். அப்படத்தின் பட்ஜெட் என்னவோ அதுதான் உங்களது சம்பளம். என்னை நம்பி தயாரிப்பாளர் ஒரு கோடி செலவழித்தால், அதுதான் என் சம்பளம். இப்படி இயக்குனர்கள் நினைத்தால்தான், அடுத்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்க முடியும்’ என்றார்.