செப்டம்பர் 19ல் ‘தண்டகாரண்யம்’
தமிழில் வெளியான ‘லப்பர் பந்து’ என்ற படம், ‘அட்ட கத்தி’ தினேஷுக்கு வெற்றிகரமாக அமைந்தது. தற்போது அவர் ‘தண்டகாரண்யம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என்ற படத்துக்கு பிறகு அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ள இதில், முக்கிய வேடங்களில் கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி நடித்துள்ளனர். நீலம் புரொடக்ஷன்ஸ், லேர்ன் அன்ட் டெக் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இது வரும் செப்டம்பர் 19ம் தேதி திரைக்கு வருகிறது.