தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ரசிகர்களின் விருப்பத்துக்காக மாறிய ஸ்ரேயா

 

கடந்த 2003ல் வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், ஸ்ரேயா சரண். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, விஜய், விக்ரம், பிரபாஸ், தனுஷ் உள்பட முன்னணி தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தனது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரு கோச்சீவ் என்பவரை கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, ராதா சரண் கோச்சீவ் என்ற மகளை பெற்றெடுத்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது சில படங்களில் கேமியோ ரோலில் நடிப்பதுடன், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘லவ் டிடாக்ஸ்’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார். ‘மிராய்’ என்ற பான் இந்தியா படத்தில், ஹீரோ தேஜா சஜ்ஜாவுக்கு அம்மாவாக நடித்தார். இப்படம் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரேயா சரண் அளித்த பேட்டியில், ‘ரசிகர்களுக்கு விருப்பமானதை கொடுத்தால், அவர்கள் நம்மை ரசிப்பதை விட மாட்டார்கள். அடுத்தடுத்து ரசிகர்கள் விரும்பக்கூடிய வகையில் புதிய படங்களை தேர்வு செய்து நடிப்பேன்’ என்றார்.