தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கோவில்பட்டியில் அரசன் ஷூட்டிங்

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் படம் அரசன். கோவில்பட்டியில் தொடங்கியிருக்கும் அரசன் பட முதற்கட்ட படப்பிடிப்பு மூன்று வாரங்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. சிலம்பரசனின் ஒரு கேரக்டர் பெயர் மதுரை டைகர் என்று கூறப்படுகிறது. மதுரையில் தொடங்கும் கதை, வட சென்னை வரை வருகிறது என்றும் சொல்கிறார்கள். விளையாட்டு வீரராக அவர் கேம் ஆடும் காட்சிகளுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகள் எடுக்கின்றனர். இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பில் தான் விஜய் சேதுபதி பங்கேற்பார் என்கிறார்கள். அங்கே இப்போது ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.