தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

கிரித்தியுடன் இணைந்த யாமி கவுதம்

பாலிவுட் டைரக்டர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள முழுநீள காதல் கதை கொண்ட படம், ‘தேரே இஷ்க் மெய்ன்’. இதில் தனுஷ் ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்நிலையில், புதுப்படத்தில் பணியாற்றுவது குறித்து ஆனந்த் எல்.ராய் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது பேண்டஸி படமாக உருவாகிறது. ‘நயி நவேலி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கிரித்தி சனோன், யாமி கவுதம் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இவர்கள் இதற்கு முன்பு ஒரே படத்தில் இணைந்து நடித்ததில்லை. சில வருடங்களுக்கு முன்பு இப்படத்தை ஆனந்த் எல்.ராய் தயாரிக்க, கோலிவுட் டைரக்டர் பாலாஜி மோகன் இயக்குவதாக இருந்தது. ஆனால், இப்போது ஆனந்த் எல்.ராய் இயக்க ஆயத்தமாகி வருகிறார்.