கிரித்தி ஷெட்டிக்கு மவுசு கூடுமா?
தெலுங்கு மற்றும் தமிழில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் கிரித்தி ஷெட்டிக்கு தற்போது தெலுங்கில் வெற்றிப் படம் அமையவில்லை. இதனால் அவரது திரையுலக மார்க்கெட் நிலவரம் ஊசலாடி வரும் நிலையில், தமிழில் ‘வா வாத்தியார்’, ‘எல்ஐகே’, ‘ஜீனி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘ஜீனி’ தவிர்த்து மற்ற இரு படங்கள் திரைக்கு வர தயாராகிவிட்டன. கார்த்தியுடன் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ என்ற படம், வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாகிறது.
பிரதீப் ரங்கநாதனுடன் நடித்துள்ள ‘எல்ஐகே’ என்ற படம், வரும் டிசம்பர் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து ரவி ேமாகனுடன் நடித்து வரும் ‘ஜீனி’ என்ற படமும் வரும் டிசம்பர் மாதத்தில் வரும் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இப்படமும் ரிலீசாவது உறுதி செய்யப்பட்டால், டிசம்பர் மாதத்தில் கிரித்தி ஷெட்டி நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரும். இப்படங்கள் வெற்றிபெற்றால் அவருக்கு மீண்டும் மவுசு கூடும்.