கும்கி 2வில் அறிமுகமாகும் மதி
சென்னை: டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவால் காடா தயாரிப்பில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார். ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றி படம் பேசுகிறது. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும் மதி, தனது அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பால் படக்குழுவினரை கவர்ந்துள்ளார். படத்துக்கு இசை, நிவாஸ் கே. பிரசன்னா. ஒளிப்பதிவு, எம். சுகுமார்.