குருடாயில் திருட்டு பற்றி பேசும் டீசல்: ஹரீஷ் கல்யாண் தகவல்
சென்னை: சண்முகம் முத்துசாமி எழுதி இயக்கியுள்ள ‘டீசல்’ என்ற படம், தீபாவளியை முன்னிட்டு வரும் 17ம் தேதி திரைக்கு வருகிறது. ஹரீஷ் கல்யாண், அதுல்யா ரவி, விநய் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசை. தேவராஜுலு எம். தயாரிப்பு. தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட், எஸ்.பி. சினிமாஸ் தயாரிக்கிறது. படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது:
2014ம் ஆண்டுக்குள் கதை நடந்து முடிகிறது. குருடாயில் திருட்டை மையப்படுத்திய கதையில், பரபரப்பான சில உண்மை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் எனது முதல் படம் இது என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ வரிசையில் ‘டீசல்’ படமும் ஹாட்ரிக் வெற்றிபெறும். நான் மீனவனாக நடிக்கிறேன். இதற்காக மோட்டார் படகு, போட் ஓட்டவும், மீன் பிடிக்கவும் பயிற்சி பெற்றேன்.