தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

50வது ஆண்டை தொட்டது லஹரி மியூசிக்

சென்னை: இசை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற நிறுவனங்களான லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக், பொன் விழா ஆண்டான 50 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளன. இந்த நிகழ்வின் அங்கமாக லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடியுடன் இணைந்து,...

சென்னை: இசை, இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் புகழ்பெற்ற நிறுவனங்களான லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக், பொன் விழா ஆண்டான 50 ஆவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளன. இந்த நிகழ்வின் அங்கமாக லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் ஆகியவை பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடியுடன் இணைந்து, ‘லஹரி - எம்ஆர்டி மியூசிக் - பிரயோக் இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி’யை தொடங்குகிறது.இந்திய கிளாசிக்கல் இசை மற்றும் பிற கலை வடிவங்களின் வளமான பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக அடுத்த வருடம் 10,000 பாடல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்: கிளாசிக்கல் இசை, பக்தி பாடல்கள், நாட்டுப்புற இசை உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களில் 10,000 பாடல்களை அடுத்த வருடத்திற்குள் உருவாக்க வேண்டும். பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடி உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அதிக பார்வையாளர்களை சென்றடைய முடியும். புதிய திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவித்தல் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்குதல். புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நிபுணர்களின் ஆதரவும் வழிகாட்டுதலும் இளம் திறமையாளர்களுக்கு கிடைக்கும்.

நிகழ்வு குறித்து லஹரி மியூசிக் மற்றும் எம்ஆர்டி மியூசிக் இயக்குநர் லஹரி வேலு கூறியதாவது, ``கலையில் 50 வருடங்களை எட்டியிருக்கும் இந்த வேளையில் எங்கள் புதிய பயணத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்திய கிளாசிக்கல் இசையை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், புதிய திறமைகளுக்கான தளமாகவும் இது அமையும். இதற்காக பிரயோக் ஸ்டுடியோ மற்றும் ஒன்லி கன்னடா ஓடிடி உடன் இணைந்து பணியாற்ற நாங்கள் ஆர்வமுடன் இருக்கிறோம்” என்றார்.