தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஷாமை டென்ஷனாக்கிய லைலா

  கடந்த 1990களில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர், லைலா. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘கள்ளழகர்’, ‘ரோஜாவனம்’, ‘முதல்வன்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘தீனா’, ‘தில்’, ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். பாலா இயக்கிய ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய...

 

கடந்த 1990களில் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர், லைலா. தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், தமிழில் ‘கள்ளழகர்’, ‘ரோஜாவனம்’, ‘முதல்வன்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘தீனா’, ‘தில்’, ‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்தார். பாலா இயக்கிய ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்கள் அவருக்கு அதிக புகழை கொடுத்தது. அவர் மிகவும் பிசியாக நடித்து வந்த நேரத்தில், கடந்த 2002ம் ஆண்டு மும்பை தொழிலதிபர் மெஹ்தி என்பவரை காதல் திருமணம் செய்தார். பிறகு தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் மும்பையில் செட்டிலானார். கடந்த 2022ம் ஆண்டு கார்த்தி நடித்த ‘சர்தார்’ என்ற படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த லைலா, தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’, ஆதி நடித்த ‘சப்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.

ஷாம், லைலா இருவரும் ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில், லைலா குறித்து ஷாம் பகிர்ந்துள்ள விஷயம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசும்போது, ‘எனக்கு பிடிக்காத நடிகை யார் என்று கேட்டால், அது லைலா என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம், ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஒருமாதிரி இரிடேட் செய்வது போன்ற கேரக்டரில் லைலா நடித்திருப்பார். படம் முழுவதும் அப்படித்தான் நடித்திருப்பார். அதுதான் எனக்கு பிடிக்கவில்லை. இது ஒருகட்டத்தில் எனக்கு வெறுப்பாக மாறியது. இனி லைலாவுடன் இணைந்து நடிக்கக்கூடாது என்று முடிவு செய்தேன். ஆனால், நிஜ வாழ்க்கையில் லைலா மிகவும் ஜாலியான கேரக்டர்’ என்று தெரிவித்துள்ளார்.