தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

லிப்லாக் காட்சியில் நடிக்க மறுத்த மானசா

பிரவீன்.கே இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘ஆர்யன்’ படம், வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இதுகுறித்து விஷ்ணு விஷால் கூறுகையில், ‘பான் இந்தியா படங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மகன் ஆர்யன் பெயரை படத்துக்கு வைத்துள்ளேன். செல்வராகவன் கதாபாத்திரம் ஹைலைட்டாக இருக்கும். கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்தபோது, மானசா சவுத்ரியுடன் ‘லிப்லாக்’ காட்சி ஒன்றை படமாக்க முடிவு செய்தோம். மானசா சவுத்ரியிடம் இதுபற்றி கேட்டபோது, நான் ஏற்கனவே சில படங்களில் ‘லிப்லாக்’ கொடுத்துவிட்டேன்.

மறுபடியும் அப்படி நான் நடித்தால், எனக்கு முத்திரை குத்திவிடுவார்கள் என்று இயக்குனரிடம் சொன்னார். அதை டைரக்டர் என்னிடம் சொன்னார். மானசா சவுத்ரி ‘லிப்லாக்’ காட்சியில் நடித்திருக்கிறார். இதுவரை நான் எந்த படத்திலும் ‘லிப்லாக்’ கொடுத்தது இல்லையே என்று சொன்னேன். எனினும் நான் ஒரு நடிகராகவும், பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையிலும் ‘லிப்லாக்’ காட்சியை அப்போது நாங்கள் படமாக்கவில்லை’ என்றார்.