காதலுக்காக பழிவாங்கும் கதை மதராஸி: ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படம், ‘மதராஸி’. இதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் ஷபீர் நடித்துள்ளனர். படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ‘காதலை மையப்படுத்தி நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையுடன் ‘மதராஸி’ உருவாகியுள்ளது. ‘கஜினி’ படத்தை...
சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படம், ‘மதராஸி’. இதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். முக்கிய வேடங்களில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் ஷபீர் நடித்துள்ளனர். படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறுகையில், ‘காதலை மையப்படுத்தி நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையுடன் ‘மதராஸி’ உருவாகியுள்ளது. ‘கஜினி’ படத்தை போல் பழிவாங்கும் கதை
என்றாலும், காதல் மையமாக இருக்கும். இந்தியில் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடிக்க கேட்டபோது மறுத்துவிட்ட வித்யூத் ஜம்வால், ‘மதராஸி’ படத்துக்கு நான் அணுகியபோது, கதை கேட்காமலேயே நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னதாக வித்யூத் ஜம்வால், எனது இயக்கத்தில் ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்’ என்றார். வரும் செப்டம்பர் 5ம் தேதி ‘மதராஸி’ படம் வெளியாகிறது.