தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காதல் கணவரை விவாகரத்து செய்கிறார் ஊர்மிளா

மும்பை: பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், தனது கணவர் மொஹ்சின் அக்தர் மிர்ரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தில் ஊர்மிளா நடித்திருந்தார். ‘ரங்கீலா’, ‘சத்யா’ போன்ற இந்திப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் தொழிலதிபரும், மாடலுமான காஷ்மீரைச் சேர்ந்த மொஹ்சின்...

மும்பை: பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர், தனது கணவர் மொஹ்சின் அக்தர் மிர்ரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ படத்தில் ஊர்மிளா நடித்திருந்தார். ‘ரங்கீலா’, ‘சத்யா’ போன்ற இந்திப் படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் தொழிலதிபரும், மாடலுமான காஷ்மீரைச் சேர்ந்த மொஹ்சின் அக்தர் மிர் என்பவருக்கும், ஊர்மினா மடோன்கருக்கும் கடந்த 2016 பிப்ரவரி 4ம் தேதி திருமணம் நடந்தது. தற்போது ஊர்மிளா மடோன்கருக்கு 50 வயதாகிறது. மொஹ்சின் அக்தர் மிர்ருக்கு 40 வயதாகிறது. திருமணமாகி 8 ஆண்டுகளான நிலையில், தற்போது அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், மொஹ்சின் அக்தர் மிர்ரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, ஊர்மிளா மடோன்கர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.