தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காதலை விரும்பும் ஸ்ரீலீலா

தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஸ்ரீலீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ரவி மோகன் நடிக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘தற்போது எனக்கு 24 வயது ஆகிறது. அதனால்,...

தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஸ்ரீலீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா முரளி, ரவி மோகன் நடிக்கும் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில், ‘தற்போது எனக்கு 24 வயது ஆகிறது. அதனால், மென்மையான காதல் மற்றும் மிகவும் ஆரோக்கியமான நகைச்சுவை தொடர்பான படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

இப்போது என் மனநிலை இப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்கள் அதிகமாக வெளியாகின்றன. அதுபோல் பெண்களின் வலிமையான மற்றும் மற்றவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் கதைகளை திரையில் பார்க்கும்போது, எனக்கும் அதுபோன்ற கேரக்டர்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.