தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

காதல் கதையில் அறிமுகமாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர்

சென்னை: சீயோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து வழங்க, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் 35 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். நவீன கால இளைஞர்களை கவரும் காதல் கதையுடன் உருவாகியுள்ள இப்படத்தை ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் இணை இயக்குராக பணியாற்றிய மதன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜ்கமல் அரங்கம் அமைத்துள்ளார். சுரேஷ் குமார் எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படத்தின் வெளியீட்டுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது.