மாடன் கொடை விழா - திரை விமர்சனம்
சென்னையில் கூலி வேலை பார்க்கும் கோகுல் கவுதம், தன் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று கிராமத்துக்கு வருகிறார். பல வருடங்களாக சுடலை மாடன் கொடை விழா நடத்த முடியாததால், ஊரிலுள்ள மக்களுக்கு கெடுதல் நடப்பதாகவும், சாமியின் சாபம் நீங்க உடனே கொடை விழா நடத்துவதே தனது கடைசி ஆசையாக பாட்டி சொல்கிறார். சுடலை மாடன் கொடை...
வில்லனாக வந்து, திடீரென்று திருந்தும் டாக்டர் சூர்ய நாராயணன் கவனத்தை ஈர்க்கிறார். பெற்றோராக சூப்பர் குட் சுப்பிரமணி, ஸ்ரீபிரியா மற்றும் பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா, சாவித்திரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். சின்ராஜ் கேமரா வறண்ட பூமியையும், வெள்ளந்தி மக்களையும் யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. விபின்.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ப பயணித்துள்ளது. நெய்வேலி பாரதிகுமாரின் வசனம் யதார்த்தம். சில குறைகள் இருந்தாலும், மனிதநேயத்தை வலியுறுத்திய இயக்குனர் இரா.தங்கபாண்டியை பாராட்டலாம.