மதுபாலா: கேலி, கிண்டலை எதிர்கொள்ள முடியவில்லை
மும்பை: மும்பையில் தனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசிக்கும் மதுபாலா, மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ‘ஆரம்ப காலத்தில் தென்னிந்திய கலைஞர்கள் பாலிவுட்டில் அதிகமான கேலியையும் மற்றும் கிண்டலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அதுபோன்ற நிலை இல்லை. அந்த காலக்கட்டத்தில் நாங்கள் சந்தித்த பிரச்னைகளால் எனக்கு அதிக...
மும்பை: மும்பையில் தனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் வசிக்கும் மதுபாலா, மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், ‘ஆரம்ப காலத்தில் தென்னிந்திய கலைஞர்கள் பாலிவுட்டில் அதிகமான கேலியையும் மற்றும் கிண்டலையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது அதுபோன்ற நிலை இல்லை. அந்த காலக்கட்டத்தில் நாங்கள் சந்தித்த பிரச்னைகளால் எனக்கு அதிக மன வருத்தம் ஏற்பட்டது. நாம் இந்தியர்கள். ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று யோசிப்பேன். அவர்களின் கேலிகளுக்கு எங்களால் பதில் அளிக்க முடியவில்லை. அந்த காலக்கட்டத்தில் எப்படி போராட வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை. இப்போது நிலமை மாறிவிட்டது’ என்று கூறியுள்ளார்.