தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

தலையில் பாட்டிலை உடைத்து மகேஷ்பாபு போஸ்டருக்கு ரத்த திலகமிட்ட ரசிகர்: சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி

 

ஐதராபாத்: சினிமாவில் பிரபலமாக இருக்கும் முன்னணி ஹீரோக்களின் ரசிகர்கள் நாளுக்கு நாள் தங்களது அபிமானத்தை வெளிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் செய்யும் செயல்கள் அதிர்ச்சி தருவதாகவும் முகம் சுளிக்க வைப்பதாகவும் இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் பாலகிருஷ்ணா தன்னுடைய பட வெளியீட்டிட்ன்போது, கிடா வெட்டி பலியிட்டு ரத்த அபிஷேகம் செய்த ரசிகர்கர்ளை இனி அதுபோல் உயிர்பலிர் செய்யக்கூடாது என்று கூறி வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர் ஒருவர் திரையரங்கு முன்பாக சமீபத்தில் கட்டப்பட்டிருந்த ‘வாரணாசி’ படத்தின் மகேஷ்பாபு போஸ்டர் முன்பாக

நின்றுகொண்டு ஒரு பாட்டிலை எடுத்து தனது தலையில் உடைத்தார். தலையில் வழிந்த ரத்தத்தால் போஸ்டரில் மகேஷ் பாபுவின் நெற்றிக்கு ரத்தத் திலகம்

வைக்கிறார்.

அதன்பிறகு அவருக்கு தீபாராதனையும் காட்டுகிறார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஹீரோக்கள் தங்களது ரசிகர்களுக்கு மிகக் கறாராக சொன்னால் கூட படிப்பறிவில்லாத ரசிகர்கள் அதை கேட்பதில்லை என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.