மேக்கப் இல்லாமல் சுற்றும் ரெஜினா
தென்னிந்திய சினிமா மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தமிழில் ‘கண்ட நாள் முதல்’, ‘அழகிய அசுரா’ ஆகிய படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்திருந்தாலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக அவர் நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்த பிறகு பிரபலமானார். அதனை தொடர்ந்து, ‘நிர்ணயம்’, ‘ராஜ தந்திரம்’, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் நெகடிவ் ரோலில் நடித்திருந்தார்.
படங்களை தாண்டி ‘ராக்கெட் பாய்ஸ்’, ‘ஷூர்வீர்’, ‘ஃபர்ஸி’ உள்ளிட்ட வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது, நயன்தாராவுடன் இணைந்து ‘மூக்குத்தி அம்மன் 2’, ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரெஜினா கசாண்ட்ரா அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் செய்து அதை பதிவிட்டு வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் செய்துள்ள பதிவில் மேக்கப் இல்லாமல் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள ரெஜினா அங்கு எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.