மாளவிகா மோகனன் திடீர் வருத்தம்
சென்னை: மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தனக்கு கிளாமர் மட்டுமே வரும் என்ற இமேஜை, ‘தங்கலான்’ படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் மாற்றினார். சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அவர் நடித்த ‘ஹிருதயபூர்வம்’ என்ற படம் ஹிட்டாகி இருக்கிறது. இதையடுத்து தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’, தெலுங்கில் பிரபாஸுடன் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தினமும் சமூக வலைத்தளங்களில் தனது கிளாமர் போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வரும் மாளவிகா மோகனன், சமீபத்தில் தனது குடும்ப போட்டோவை வெளியிட்டார். அவரது தந்தை கே.யு.மோகனன், பாலிவுட்டில் நிறைய சூப்பர்ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் மிகவும் வருத்தப்படுகிறார்.