தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

அதிர்ஷ்டசாலியாக உணரும் மாளவிகா

‘தங்கலான்’ படத்தை அடுத்து தற்போது தமிழில் கார்த்தியுடன் ‘சர்தார் 2’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். தற்போது, பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜா சாப்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். மாருதி இயக்கியுள்ள இது காதல் கலந்த திகில் நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது. இப்படம் குறித்து மாளவிகா மோகனன் பேசியகையில், ”பிரபாஸுடன் இணைந்து நான் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேன். இதில் அறிமுக நாயகி போல் இல்லாமல் எனக்கு ஒரு சிறந்த வேடத்தை கொடுத்துள்ளனர். பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால் இதில் நான் எதிர்பார்த்ததை விட அழுத்தமான வேடம் எனக்கு கிடைத்துள்ளது. இதுபோன்ற பெரிய நடிகர்களின் படங்களில் நடிகைகளுக்கு ஒரு பாடல், 5 காட்சிகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி. இப்படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கிறது. கூடுதல் காட்சிகளிலும் நடித்துள்ளேன்” என்றார். ‘தி ராஜா சாப்’ படம் அடுத்தாண்டு ஜனவரி 9ம் தேதி சங்கராந்தி மாற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது