தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

மலையாள உச்சரிப்பு தொடர்பாக ஜான்வி கபூருக்கு எதிர்ப்பு தெரிவித்த: மலையாள நடிகைக்கு ரசிகர்கள் பதிலடி

கொச்சி: இந்தியில் துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் இணைந்து நடித்த ‘பரம் சுந்தரி’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். சமீபத்தில் டிரைலர் வெளியானது. இதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்புக்கு நடிகை பவித்ரா மேனன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து...

கொச்சி: இந்தியில் துஷார் ஜலோடா இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் இணைந்து நடித்த ‘பரம் சுந்தரி’ என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த பெண்ணாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். சமீபத்தில் டிரைலர் வெளியானது. இதில் ஜான்வி கபூரின் மலையாள உச்சரிப்புக்கு நடிகை பவித்ரா மேனன் கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

பவித்ரா மேனன் கூறுகையில், ‘டிரைலரில் ஜான்வி கபூர் பேசும் மலையாள உச்சரிப்பில் நிறைய பிழை இருக்கிறது. மலையாளத்தை சேர்ந்த பெண்களை நடிக்க வைப்பதில் பாலிவுட்காரர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. நாங்கள் என்ன திறமை குறைந்தவர்களா? கேரளாவிலுள்ள எந்த பெண்ணும் இதுபோல் மலையாளத்தை தவறாக பேச மாட்டார்கள். நான் ஒரு மலையாள நடிகை என்றாலும், இந்தியில் சரளமாக பேசுவேன். ஜான்வி கபூர் நடித்துள்ள கேரக்டருக்கு ஒரு மலையாள நடிகையை கண்டுபிடித்து நடிக்க வைப்பது என்பது அவ்வளவு சிரமமான விஷயமா?

மலையாள நடிகைகள் பற்றி தவறாக காட்டுவதே பாலிவுட்காரர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. நாங்கள் சாதாரணமானவர்கள் என்றாலும், அதிக திறமை கொண்டவர்கள். நாங்கள் எங்கேயும் சென்று மல்லிகைப்பூ சூடிக்கொண்டு மோகினி ஆட்டம் ஆடுவது இல்லை. ஸ்ரீதேவியின் மகள் என்பதால், அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா?’ என்று ஆவேசத்துடன் கேட்டுள்ளார். அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்துள்ள சிலர், ‘மலையாள டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பேச வைத்திருக்கலாம்’ என்று சொல்லியிருக்கின்றனர்.

வேறு சிலர், ‘ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் தீபிகா படுகோன், ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தில் அலியா பட் ஆகியோர் வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்களாக நடித்தனர். ஸ்ரீ தேவியை தொடர்ந்து மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் சுகுமாரன் போன்றோர் பல்வேறு மொழிகளில் நடிக்கின்றனர். நடிகர்களை நடிகர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர் எந்த மொழி, சாதி, மதம் என்று பார்க்கக் கூடாது’ என்று, ஜான்வி கபூருக்கு ஆதரவாக பேசி பதிலடி கொடுத்துள்ளனர்.